News December 29, 2024

இலவச பயிற்சி வகுப்பில் மாணாக்கர்கள் பங்கேற்க அழைப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடத்தப்படவுள்ள Group IV/VA0 தேர்வுக்கு 02.01.2025 முதல் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் நடத்தப்பட உள்ள இலவச பயிற்சி வகுப்பில் மாணாக்கர்கள் பங்கேற்கலாம். மேலும் https://tinyurl.com/tnpscgroup4coachingsvg என்ற google from-ல் தங்கள் சுய விபரங்களை பூர்த்தி செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.

Similar News

News August 13, 2025

சிவகங்கை: உதவி எண்கள் SAVE IT..!

image

தமிழக அரசு அறிவித்துள்ள இந்த உதவி எண்களை SAVE பண்ணி வச்சிக்கோங்க
▶️ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️ பெண்கள் பாதுகாப்பு – 191
▶️ காவல் மற்றும் ஆம்புலன்ஸ் – 112
▶️ இணைய பாதுகாப்பு – 1930
தேவையான அவசர காலங்களில், இந்த எண்களை தொடர்பு கொண்டால் உடனடியாக உதவி கிடைக்கும். இந்த தகவலை SHARE பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க..!

News August 13, 2025

சிவகங்கை: மதுபான கடைகள் மூடல்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், FL2, FL3 உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும். மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

விநாயகர் சதுர்த்தி – ஆட்சியர் அறிவுறுத்தல்

image

சிவகங்கை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டுதல்களின் படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாத்திட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!