News December 29, 2024

மன்மோகனுக்கு மரியாதை செலுத்திய மொரீசியஸ் அரசு

image

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. இந்நிலையில் மன்மோகன் சிங் மறைவை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மொரீசியஸ் தீவில் நேற்று தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்தது. அனைத்து அலுவலகங்கள் மற்றும் மையங்களில் மாலை சூரியன் மறையும் வரை தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு இருந்தது.

Similar News

News March 10, 2026

பெட்ரோல், டீசல் விலை ரூ.22 உயர்வு… எங்கு தெரியுமா?

image

ஈரான் போர் காரணமாக இந்தியா உள்பட உலகில் பல நாடுகளிலும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு இப்போதே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலைகளையும் லிட்டருக்கு (இலங்கை கரன்சியில்) ரூ.22 உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் எரிபொருள் விலை உயராது என அரசு அறிவித்துள்ளது நிம்மதி அளித்தாலும், சர்வதேச நிலைமைகளால் சூழல் மாறலாம்.

News March 10, 2026

BIG NEWS: தமிழக தேர்தல் தேதி.. புதிய அப்டேட்

image

TN உள்பட 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதியை மார்ச் 15-ம் தேதி CEC அறிவிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. அப்போது, TN-க்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.

News March 10, 2026

புதிய கவர்னர் மார்ச் 12-ல் பொறுப்பேற்பு

image

தமிழகத்தின் தற்காலிக கவர்னராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மார்ச் 12-ல் பொறுப்பேற்கவுள்ளார். மக்கள் மாளிகையில் நடக்கும் நிகழ்வில் ராஜேந்திர விஸ்வநாத்துக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். கேரளத்தின் ஆளுநராக உள்ள அவர், தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கவுள்ளார். முன்னதாக, TN கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி மேற்குவங்கத்தின் கவர்னராக மாற்றப்பட்டுள்ளார்.

error: Content is protected !!