News December 29, 2024
கலெக்டரின் மகளாக இப்படி விடுவார்களா?: தாய்

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை 6 நாட்களாகியும் மீட்கப்படாத நிலையில், குழந்தையின் தாய் எழுப்பிய கேள்விகள் வேதனையை வெளிப்படுத்துகின்றன. ‘‘எவ்வளவு வலியை குழந்தையை சந்தித்துள்ளதோ.. பசிக்கும், தாகத்திற்கும் எவ்வளவு பாடுபட்டிருக்குமோ.. கலெக்டரின் மகளாக இருந்தால் இப்படி விடுவார்களா?’’ என அந்த தாய் அழுது கொண்டே கூறுவது பதற செய்கிறது. குழந்தையை மீட்க அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
Similar News
News March 18, 2026
அதிமுக கூட்டணியில் என்ன நடக்கிறது?

அதிமுகவில் தொகுதி பங்கீட்டுக்கு குழு அமைத்து 4 நாள்கள் ஆகியும் இதுவரை ஒரு கட்சியை கூட அழைத்து பேசவில்லை. கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய உள்ளதாக அதிமுக, பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். அப்படியே இருந்தாலும் ஏற்கெனவே உள்ள பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளை அழைத்துப் பேசாதது ஏன் என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த தாமதத்தால் NDA-வில் புகைச்சல் என திமுகவினர் விமர்சிக்கின்றனர்.
News March 18, 2026
வெள்ளி விலை ₹5,000 குறைந்தது!

<<19413476>>தங்கத்தை தொடர்ந்து<<>> வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ₹5,000 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி கிராம் ₹275-க்கும், பார் வெள்ளி கிலோ ₹2,75,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 2% குறைந்து 1 அவுன்ஸ்(28 கிராம்) 78 டாலர்களுக்கு விற்பனையாகிறது. இது வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
News March 18, 2026
வடகொரியா தேர்தல்: கிம்முக்கு எதிராக வாக்களித்த மக்கள்!

வடகொரியா நாடாளுமன்ற தேர்தலில், கிம் ஜாங் உன்னின் Workers Party of Korea கூட்டணி கட்சிகள் மொத்தமுள்ள 687 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இக்கூட்டணிக்கு 99.93% வாக்குகள் கிடைத்துள்ளது. இத்தேர்தலில் பல ஆச்சரியங்கள் உள்ளன. அனைத்து தொகுதிகளில் ஒருவர் மட்டுமே போட்டியிட்டுள்ளனர். மேலும், 1957-ல் இருந்து முதல் முறையாக 0.07% வாக்குகள் கிம் கட்சிக்கு எதிராக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


