News December 29, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை ▶குறள் எண்: 132 ▶குறள்: பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. ▶பொருள்: ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

Similar News

News March 6, 2026

‘தோல்’ கொடுக்குமா ஆம்பூர் தொகுதி?

image

திமுகவிடம் IUML ஆம்பூர் தொகுதியை கேட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஆம்பூரில் IUML போட்டியிடும் பட்சத்தில், சிறுபான்மையின வாக்குகளை முழுமையாகத் திரட்டுவது எளிதாக இருக்கும். அதே சமயம், காலம் காலமாக நீடித்து வரும் தொழிற்சாலை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை முன்வைப்பவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என பேசப்படுகிறது. முந்தைய தேர்தலில் வாணியம்பாடியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் IUML தோல்வி அடைந்தது.

News March 6, 2026

ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாம்: USA

image

இந்தியா-US இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து, ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய்யை வாங்காது என டிரம்ப் கூறியிருந்தார். தற்போது, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் உலகளவில் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள சூழலில், ரஷ்யாவிடம் 30 நாள்களுக்கு இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாம் என USA தெரிவித்துள்ளது. இது தற்காலிக அனுமதி என்றும், இந்த வர்த்தகத்தால் ரஷ்யா பயன்பெறாது எனவும் USA கூறியுள்ளது.

News March 6, 2026

நேற்றைய மேட்ச்சில் நடந்த 7 மேஜிக்!

image

T20I WC அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேட்ச்சில் நிகழ்ந்த 7-ம் நம்பரின் மேஜிக்கை பலரும் கவனித்திருக்க மாட்டோம். உடனே ‘தோனி வந்தாரு.. அதானே’ என எண்ண வேண்டாம். வேறு சில சுவாரசிய விஷயங்கள் உள்ளன. அது என்ன என அறிய மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe பண்ணுங்க. கண்டிப்பாக ஆச்சரியப்படுவீங்க. நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!