News December 29, 2024
அசைபோடுறத நிறுத்துங்க! நிம்மதியா தூங்குங்க!!

ராத்திரி ஆனாலே சிலருக்கு, பழச நெனச்சி தூக்கம் வராத அளவுக்கு மனசு அசைபோடும். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் நாள்தோறும் இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் பாலில், சுத்தமான மஞ்சள் தூள், 2 விழுது பூண்டை இடித்து அரைத்து கலந்து பருகினால், எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இதேபோல, அத்திக்காய் பொடியை அரை ஸ்பூன் பாலில் கலந்து நாள்தோறும் இரவு குடித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
Similar News
News August 15, 2025
தமிழ் சினிமாவின் சாபக்கேடுகளா இவை?

Pan India, கேமியோ, ₹1,000 கோடி வசூல் எதிர்பார்ப்பு ஆகியவையே தற்போதைய தமிழ் சினிமாவின் சாபக்கேடு என திரை விமர்சகர்கள் கூறுகின்றனர். முன்பு அனைத்து முன்னணி ஹீரோக்களும் ஆக்ஷன் படங்கள் நடித்தாலும், அதில் உள்ள திரைக்கதை மக்களால் ரசிக்கப்பட்டது. இன்றோ, ஆக்ஷன் மட்டுமே உண்டு, கதை இல்லை என ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர். இருப்பினும், திரை ரசனை ஒவ்வொரு தலைமுறைக்கும் மாறும் என்கின்றனர். உங்கள் கருத்து என்ன?
News August 15, 2025
புதிய காற்றழுத்தம்.. ஆகஸ்ட் 21 வரை மழை நீடிக்கும்..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார், ஊத்துக்கோட்டையில் அதிகபட்சமாக தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையிலும் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்புள்ளதாம். வெளியே செல்லும்போது கவனம் தேவை நண்பர்களே!
News August 15, 2025
கிருஷ்ண ஜெயந்தியில் எப்படி வழிபட வேண்டும்!

★வீட்டின் அனைத்து இடங்களிலும், தீர்த்த பொடியை(பச்சைக் கற்பூரம் & ஏலக்காய்) தெளிப்பது மிகவும் விசேஷமானதாகும்.
★அரிசி மாவினால் கோலமிட வேண்டும்.
★கிருஷ்ணருக்கு துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
★அஷ்டமி அன்று முடிந்த தானத்தை பிறருக்கு செய்யுங்கள்.
★பூஜைக்கு நெய்வேத்தியமாக வெண்ணெய், சர்க்கரை, அவல், முறுக்கு, சீடை, இனிப்பு சீடை, அதிரசம் தேன்குழல் போன்ற பலகாரங்களை படைக்கலாம்.