News December 29, 2024

ஜனவரி மாதம் விஜய் சுற்றுப்பயணம் தொடக்கம்?

image

தவெக கட்சியை தொடங்கியபிறகு, விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை விஜய் நடத்தினார். இதையடுத்து தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். மாநாட்டைப் போல அடுத்த அரசியல் நகர்வும் வெற்றிகரமாக இருக்க விரும்புகிறார். இதை மனதில் வைத்து, மாநிலத்தில் விரைவில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும், 2025 ஜன. இறுதியில் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News September 10, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப்.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News September 10, 2025

அணி மாறி வாக்களித்த INDIA கூட்டணி MP-கள்

image

துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணியின் 15 எம்.பி.க்கள் NDA வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்துள்ளனர். தேர்தலில் INDIA கூட்டணியின் 315 எம்.பி.க்கள் வாக்களித்ததாக காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவில் சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன. எனவே, INDIA கூட்டணியின் 15 எம்.பி.க்கள் எதிரணி வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்தது உறுதியாகியுள்ளது.

News September 10, 2025

சிபி ராதாகிருஷ்ணனுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து

image

துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சிபி ராதாகிருஷ்ணனுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு மற்றும் நாட்டின் ஜனநாயக கொள்கைகளுக்கான தனது கடமைகளை சிபி ராதாகிருஷ்ணன் உறுதியுடன் நிறைவேற்றுவார் என நம்புவதாக X தள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே போல EPS உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!