News December 28, 2024
மதுக்கடைகளை அதிகரிப்பதால் என்ன பயன்? நீதிமன்றம் கேள்வி

மதுக்கடைகளை அதிகரிப்பதால் என்ன பயன் என்று மாநில அரசுக்கு சென்னை ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அருகிலும் மதுக்கடைகள் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. மதுக்குடிப்பதால் உடல் நலனுக்கு கேடு என விளம்பரம் வெளியிடுவதை சுட்டிக்காட்டி, மதுக்கடைகளை அதிகரித்துவிட்டு அந்த விளம்பரத்தை வெளியிடுவதால் என்ன பயன் எனவும் நீதிமன்றம் வினவியது.
Similar News
News March 10, 2026
மார்ச் 10: வரலாற்றில் இன்று

*1922 – பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு பம்பாயில் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். *1948 – இந்தியாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மதராஸில் தொடங்கப்பட்டது. *1933 – பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த தினம். *1980 – திரைப்படப் பாடலாசிரியர் மதன் கார்க்கி பிறந்த தினம். *1897 – இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் புலே நினைவு தினம்.
News March 10, 2026
இலங்கை அணியின் கோச் ஆனார் கேரி கிர்ஸ்டன்

டி20 WC தொடரில் இலங்கை அணியின் படுதோல்வியை அடுத்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜெயசூர்யா விலகினார். இதையடுத்து அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு 2011 இல் உலகக்கோப்பை வென்று கொடுத்த கேரி கிர்ஸ்டன், 2 ஆண்டுகாலத்திற்கு வரும் ஏப்ரல் 14, 2028 வரை தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.
News March 10, 2026
தனிமையில் இருப்பதால் இத்தனை நோய்கள் வருமா?

சிலர் எப்போது பார்த்தாலும் தனிமையிலேயே இருப்பார்கள். என்றைக்காவது தனியாக இருந்தால் பிரச்னை கிடையாது. ஆனால், நண்பர்கள், குடும்பத்தினர், பொழுதுபோக்கு என எதற்கும் நேரம் செலவிடாமல் எப்போதுமே தனிமையிலேயே இருப்பது, இதய நோய், ஸ்ட்ரோக், சர்க்கரை போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதாக கேம்பிரிட்ஜ் பல்கலை., ஆய்வில் தெரியவந்துள்ளது. நரம்பு அமைப்பு & ஹார்மோன் சமநிலையை பாதிப்பதால் இந்த பிரச்னைகள் ஏற்படுகிறதாம்.


