News December 28, 2024
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 இல்லை

2024 <<15005578>>பொங்கல் <<>>பண்டிகையின்போது, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கமாக ரூ.1,000 வழங்கப்பட்டது. அதேபோல், 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காகவும் ரூ.1,000 அளிக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் அரசு வெளியிட்ட அறிவிப்பில் ரூ.1,000 குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை. இதனால் ரூ.1,000 ரொக்கத்தை எதிர்பார்த்திருந்த மக்கள் ஏமாற்றத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளனர்.
Similar News
News September 12, 2025
கொள்ளை சிரிப்பில் தங்கப்பூ!

கன்னட படத்தில் அறிமுகமாகி, தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக உருவெடுத்துள்ளார் ருக்மினி வசந்த். அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். கலர் கலரான டிரெஸ்களில், கொள்ளை கொள்ளும் சிரிப்பில் அவர், விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர். மேலே Swipe செய்து நீங்களும் அந்த ‘தங்கப்பூவை’ பாருங்கள்.
News September 12, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் கர்நாடகம்

கர்நாடகாவில் வரும் 22-ம் தேதி முதல் புதிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில CM சித்தராமையா அறிவித்துள்ளார். புதிய கணக்கெடுப்பு சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையில் எடுக்கப்படும் எனவும், 2015-ல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு செல்லாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக பிஹார், தெலங்கானாவில் மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தின. தமிழ்நாட்டிலும் இத்தகைய கோரிக்கை உள்ளது.
News September 12, 2025
முடி கொட்டுதா? குளிக்கும்போது இதெல்லாம் பண்ணாதீங்க!

➤சூடான நீரில் குளிப்பது தலை முடிக்கு நல்லதல்ல. ➤தலைக்கு நேரடியாக ஷாம்பு பயன்படுத்த வேண்டாம். அதனை தண்ணீரில் கலந்த பிறகு தலையில் தேய்க்கவும். ➤சல்பேட் இல்லாத ஷாம்புவை பயன்படுத்துவது நல்லது. ➤தலைக்கு குளிப்பதற்கு முன், தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் முடியின் வேர் பலப்படும். ➤குளித்த பிறகு துண்டால் முடியை அழுத்தி தேய்க்க வேண்டாம். SHARE IT.