News March 25, 2024
மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள பிரபாஸ்

பிரபாஸ் – கமல் கூட்டணியில் உருவாகிவரும் ‘கல்கி 2898 AD’ படப்பிடிப்பு முடிவடையும் தறுவாயில் உள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில், அமிதாப், தீபிகா படுகோன் போன்ற பான் இந்தியா அளவிலான நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்தை பிரபாஸ் மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து உள்ளாராம். முந்தைய படங்களின் தோல்வியை ‘கல்கி 2898 AD’ படம் நிச்சயமாக சரி செய்யுமென தன் நட்பு வட்டத்தில் மனந்திறந்து கூறியுள்ளாராம்.
Similar News
News April 29, 2025
BREAKING: இந்தியா த்ரில் வெற்றி

தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான ODI-ல், இந்திய மகளிர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. IND-SL-SA இடையிலான முத்தரப்பு ODI தொடர் இலங்கையில் நடந்துவருகிறது. முதல் ஆட்டத்தில் SL-ஐ வீழ்த்திய IND, இன்று நடந்த 2-வது ஆட்டத்தில் 50 ஓவர்களில் 276/6 ரன்கள் குவித்தது. பிரதிகா ராவல் 78 ரன்கள் குவித்தார். 277 ரன் இலக்கை விரட்டிய SA, 261 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.
News April 29, 2025
தகிக்கும் கோடையிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் உங்களது உடல்நலனை காக்க இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க. *நாள்தோறும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் அருந்துதல். *உச்சி வெயிலில் (காலை 11 – மாலை 3) வரை தேவையின்றி வெளியே செல்லாமல் இருங்கள். *உடல் வெப்பநிலையைத் தணிக்க இருமுறை குளியுங்கள்.* பருத்தி ஆடைகளை அணியுங்கள்.* எண்ணெய், கொழுப்பு உணவுகளைத் தவிருங்கள். *செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்களைத் தவிர்க்க வேண்டும். SHARE IT.
News April 29, 2025
IPL லாபத்தில் 10 IIT-கள் கட்டலாம்: ஷாக் ரிப்போர்ட்

3 ஆண்டுகளில் IPL லாபத்திற்கு 40% வரி விதிக்கப்பட்டிருந்தால் ₹15,000 கோடி கிடைத்திருக்கும், இதன் மூலம் 10 ஐஐடிக்கள் (அ) தேசிய உள்ளார்ந்த தொழில்நுட்ப நிதியை உருவாக்கியிருக்கலாம் என IISc பெங்களூரு பேராசிரியர் மயங்க் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார். IPL டீம் உரிமையாளர்கள் கூடுதலாக ₹480 கோடி வரை ஈட்டியிருந்தால், ஒவ்வொரு ஆண்டும் ₹6,000 கோடியை ஆராய்ச்சி பணிகளுக்கு அளித்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.