News December 28, 2024
தொடக்கக்கல்வி ஆசிரியர் தேர்வு: 30ஆம் தேதி சான்றிதழ்

ஜூன், ஜூலையில் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை ஏராளமான மாணவர்கள், தனித்தேர்வர்கள் எழுதியிருந்தனர். அவர்களுக்கு 30ஆம் தேதி முதல் மதிப்பெண், பட்டய சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. ஆதலால் பயிற்சி மாணவர்கள் தங்கள் பயின்ற நிறுவனத்திலும், தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி, பயிற்சி நிறுவனத்திலும் சான்றிதழ்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 11, 2026
ஹீரோயினாகும் மகள் குறித்து மனம் திறந்த குஷ்பூ

சுந்தர் சி – குஷ்பூ தம்பதியரின் மகளான அவந்திகா `ஆரம்பம்’ என்ற மலையாள படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார். இந்நிலையில், குழந்தைகள் அவர்கள் விரும்புவதை அவர்களாகவே செய்ய வேண்டும்; அடிபட்டாலும் பரவாயில்லை, கீழே விழுந்து எழுந்து பாடம் கற்றுக் கொள்ளட்டும் என குஷ்பூ கூறியுள்ளார். இதில் தங்கள் பங்களிப்பு துளியும் இல்லை; அவளாகவே கதை கேட்டு, முடிவு செய்கிறாள் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 11, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News March 11, 2026
ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி காயமா?

ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, US தாக்குதலில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் உள்ள ஒரு டிவி சேனல் அவரை ‘ரமலானின் சான்பாஸ்’ (காயமடைந்த போர்வீரன்) என்று குறிப்பிட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. மொஜ்தபா புதிய உயர் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உயர் தலைவர் தாக்குதலில் காயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


