News December 28, 2024

ஓட்டு போடும் வயது வரம்பு குறைக்க முடிவு!

image

வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுக் கொண்ட பின் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது தேர்தல் வேட்பாளர் வரையறை, ஓட்டு போடும் வயது உள்ளிட்டவற்றை மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வாக்காளர்களின் குறைந்தபட்ச வயது வரம்பை 17 ஆகவும், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21 ஆகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News March 10, 2026

3 ஆண்டுகளில் 5 கோப்பைகள் வென்ற இந்திய அணிகள்!

image

2023-ம் ஆண்டு Men’s ODI WC-யை இந்தியா நழுவவிட்டது ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியது. இதையடுத்து, வீறுகொண்டு எழுந்த இந்தியா 5 ICC கோப்பைகளை வென்றுள்ளது. ODI WC-யை தவறவிட்ட ரோஹித் படை, 2024 T20I WC & 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. பெண்கள் அணி 2025 ODI WC-யை முதல்முறை முத்தமிட்டது. சில மாதங்களுக்கு முன், U19 இந்திய அணி ODI WC-யை வென்ற நிலையில், தற்போது SKY படை T20I WC-யை தக்கவைத்து கொண்டுள்ளது.

News March 10, 2026

வீடுகள் விலை… ஒரே நாளில் ₹7.3 கோடி குறைந்தது

image

போர் காரணமாக துபாய் மற்றும் அபுதாபியில் ரியல் எஸ்டேட் பெரும் சரிவை சந்தித்துள்ளது. அபுதாபியில் 4BHK அடுக்குமாடி குடியிருப்பின் விலை ஒரே நாளில் ₹7.3 கோடி குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போர்ச் சூழல் தொடர்ந்தால் UAE-யின் பொருளாதாரம் சரியும் என்றும், இது வளைகுடாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

News March 10, 2026

BIG FLASH: சர்வதேச தரத்தில் மாறப்போகும் மதுரை ஏர்போர்ட்

image

மதுரை ஏர்போர்ட்டை சர்வதேச தரத்தில் மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஓடுதளம் 2,285 மீட்டரிலிருந்து 3,810 மீட்டராக நீட்டிக்கப்படுகிறது. இதற்காக 653 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, புதிய முனையம் மற்றும் நவீன வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. தென் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் ஒன்றான மதுரை ஏர்போர்ட் நவீன மயமாக்கப்பட்டால், தென் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.

error: Content is protected !!