News December 28, 2024
2025ம் ஆண்டு இந்த 3 ராசிகளுக்கு எப்படி இருக்கும்?

2025 பிப்ரவரி, மார்ச்சில் சனி மற்றும் குரு பெயர்ச்சி நிகழ்கின்றன. இதன் அடிப்படையில் ⁍ மேஷம்: 2025 மங்களகரமானது. நிதி நிலை முன்னேறும். திருமண வாழ்வில் இனிமை காணுவீர்கள் ⁍ ரிஷபம்: ஆக்கப்பூர்வமானதாக அமையும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் ⁍ மிதுனம்: தொழில், நிதி நிலைமைகளின் முன்னேற்றம் சீராக இருக்கும். புதிய உறவுகள் கைகூடும். காதல் வாழ்க்கை செழிக்கும்.
Similar News
News April 3, 2026
ராம்நாடு: இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல்.!

சின்னஅரியப்புவயல் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமியின் மனைவி சரோஜா (55). நேற்று காலை அவர் காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முற்பட்டபோது, அந்த இடம் பக்கத்து கிராமமான பழங்குளம் கிராமத்திற்குச் சொந்தமானது எனக் கூறி அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
News April 3, 2026
மனித உருவத்தில் அமர்ந்தபடி காட்சி தரும் சிவன் கோயில்!

பொதுவாக சிவன் என்றாலே லிங்கமும், நடராஜர் உருவம்தான் நினைவுக்கு வரும். ஆனால், மனித ரூபத்தில், அதுவும் அமர்ந்த நிலையில், சிவன் அருள்பாலிக்கும் கோயில் ஆந்திராவில் உள்ளது தெரியுமா? அனந்தபூர் மாவட்டத்திலுள்ள ஹேமாவதி திருக்கோயிலில் சிவன் சித்தாசனத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இக்கோயிலின் பெயரே ஊருக்கும் அமைந்துவிட்டது. சிவராத்திரியின் போது இங்கு 8 நாள்கள் விஷேச பூஜைகளும் நடைபெறுகிறது.
News April 3, 2026
CM ஆக EPS-ன் முதல் கையெழுத்து: SP வேலுமணி

மக்களின் கஷ்டங்களை அறிந்தே அனைத்து குடும்பத்திற்கும் ₹10,000 வழங்கப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்திருப்பதாக SP வேலுமணி தெரிவித்துள்ளார். தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியமைத்தால் முதல்வராக பொறுப்பேற்கும் EPS, அனைத்து குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் தலா ₹10,000 என்ற கோப்பில் தான் முதலில் கையெழுத்திடுவார் என அவர் கூறியுள்ளார். இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


