News December 28, 2024
Apply Now: SBI வங்கியில் 600 பணியிடங்கள்

SBI வங்கியில் காலியாக உள்ள 600 புரொபேஷனரி அதிகாரி (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு நிலை – 1இல் பணியில் சேர விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 21 – 30. கல்வித் தகுதி: Any UG Degree, CA, CMA, ICWA. சம்பளம்: ₹48,480 – ₹85,920. விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.01.2025. கூடுதல் தகவலுக்கு https://sbi.co.in/ சென்று பார்க்கவும்.
Similar News
News July 10, 2025
இரவில் இடி-மின்னலுடன் மழை: IMD

இன்று (ஜூலை 9) இரவு 1 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கீழே கமெண்ட் பண்ணுங்க.
News July 10, 2025
மக்களுக்கு திமுக கொடுத்த பரிசு கடன் தான்: இபிஎஸ் சாடல்

திமுக ஆட்சிக்கு வந்த 50 மாதங்களில் மக்களுக்கு கொடுத்த பரிசு கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி கடன் மட்டுமே என இபிஎஸ் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்த அவர் தமிழ்நாட்டுக்கு விரைவில் விடிவுகாலம் வரவேண்டும் என்கின்ற மக்களின் கூக்குரலை தானறிவேன் எனவும் கூறியுள்ளார். அனைத்துத் தரப்பு மக்களின் பேராதரவுடன் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
News July 10, 2025
குஜராத் பாலம் இடிந்து விபத்து… பலி 11 ஆக உயர்வு

குஜராத்தில் பாலம் இடிந்து ஆற்றுக்குள் வாகனங்கள் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. வதோதரா மாவட்டம் மஹிசாகர் ஆற்றின் மீது கட்டப்பட்டு இருந்த 40 ஆண்டுகால பழமையான பாலம் இடிந்து விழுந்தது. இதில் பாலம் மீது சென்ற வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. இந்த விபத்தில் 2 சிறார்கள் உள்பட மொத்தம் 11 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேலும் 1 பெண் உள்ளிட்ட 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.