News December 28, 2024

சக்தி காந்ததாஸை கைகாட்டும் மத்திய அரசு

image

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையை அடைந்ததற்கு RBI காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நுகர்வு தேவை குறைந்ததே முதல் 2 காலாண்டில் வளர்ச்சி குறையக் காரணம் எனவும், RBI-இன் பணக்கொள்கை நடவடிக்கைகளே தேவைகள் குறையக் காரணமாகி இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. வட்டியைக் குறைக்க மத்திய அரசு வலியுறுத்தியும் முன்னாள் RBI கவர்னர் சக்தி காந்ததாஸ் குறைக்கவில்லை எனவும் கூறியுள்ளது.

Similar News

News July 10, 2025

டிரம்ப் வரி விதிப்பு பட்டியல்.. இந்தியாவின் பெயர் இல்லை

image

கூடுதல் வரி விதிக்கப் போவதாக கூறி டிரம்ப் வெளியிட்டுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை. அதில், 20 நாடுகளின் பெயர்கள் உள்ளன. அதாவது, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம், இந்தோனேசியா, தெ.ஆப்பிரிக்கா, போஸ்னியா, கம்போடியா, கஜகஸ்தான், லாவோஸ், ஹெர்சிகோவினா, செர்பியா, துனிசியா உள்ளிட்ட நாடுகளின் பெயர்கள் உள்ளன. இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தக உடன்பாடு செய்யவுள்ளது.

News July 10, 2025

மகிழ்ச்சிக்கு 5 நிமிடங்கள்

image

தினசரி 5 நிமிடங்கள் ஒதுக்கி இப்பழக்கங்களை கடைப்பிடியுங்கள்: *1 நிமிடம் நிதானமாக சுவாசியுங்கள். அமைதி ஆற்றலை உள்ளிழுத்து, அன்பை வெளியிடுங்கள் *கிடைத்துள்ள ஆசிர்வாதங்களுக்காக நன்றி கூறுங்கள் *நாளை நன்றாகவே இருக்கும் என்று `ஆல் இஸ் வெல்’ சொல்லுங்கள் *கடந்தகால கசப்புகளை போக விடுங்கள், நாளை நமதே *நீங்கள் காணும் ஒவ்வொருவரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்.

News July 10, 2025

2047-க்குள் இந்திய அரசியலில் காங்கிரஸ் இருக்காது: பாஜக

image

2047-ம் ஆண்டுக்குள் இந்திய அரசியலில் இருந்து காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் துடைத்தெறியப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது. மீரட்டில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும், உ.பி. துணை முதல்வருமான கேசவ் பிரசாத் மெளரியா, பகுஜன் சமாஜ் கட்சியும் இந்திய அரசியலில் இருந்து துடைத்தெறியப்படும் என்றார். 2027 உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!