News December 28, 2024
பேரணி நடத்த அனுமதி வேண்டும்: தேமுதிகவினர் கோரிக்கை

விஜயகாந்த் நினைவுதினத்தை முன்னிட்டு நடத்தப்படும் பேரணிக்கு அனுமதி மறுப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியா? அல்லது காவல்துறையின் காழ்ப்புணர்ச்சியா? என்று தெரியவில்லை என தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி பேட்டியளித்துள்ளார். மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பேரணி நடத்த அனுமதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேமுதிகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News August 28, 2025
சென்னை: பெண் குழந்தை இருக்கா? (1/2)

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ▶️ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. ▶️2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. ▶️இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். ▶️இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க (<<17541388>>தொடர்ச்சி<<>>)
News August 28, 2025
பெண் குழந்தை இருக்கா? (2/2)

இத்திட்டத்தில் பயன்பெற குடும்பத்தில் 1 பெண் குழந்தை (அ) 2 பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். (SHARE)
News August 28, 2025
UPDATE: மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு

தொழில்நுட்பக் கோளாறால் சென்னையில் மெட்ரோ ரயிலில் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு இருந்தது. இதனால், வாட்ஸ்-அப் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது. இதனால், வழக்கம் போல் வாட்ஸ்-அப் வழியாக டிக்கெட் பெறலாம் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.