News December 28, 2024
உங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா?

விஜயகாந்த் நினைவு நாளையொட்டி தேமுதிகவினரின் அமைதி ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துள்ள விவகாரம் பலரைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. கடந்த 5ஆம் தேதி காவல்துறைக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதப்பட்ட நிலையில்,திட்டமிட்டே அனுமதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கருணாநிதி நினைவு நாள் அன்று திமுகவின் அமைதி ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதி அளித்தது எப்படி? என CMஐ டேக் செய்து நெட்டிசன்கள் வினவுகின்றனர்.
Similar News
News March 23, 2026
புதுச்சேரி: அபுமமுக 4 வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கு, அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அபுமமுக) சார்பில், முதற்கட்டமாக 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார். அதன்படி, இதில் நெட்டப்பாக்கம் (தனி) ஏ. சிலம்பரசன், வில்லியனூர் – நந்தகோபால், உழவர்கரை – எம். லாவண்யா மற்றும் இந்திரா நகர் – சி. ஜெயபால் (எ) செல்லத்தம்பி ஆகியோர் போட்டியிடுவர்.
News March 23, 2026
இதை செய்தால் AC போட்டாலும் EB Bill எகிறாது!

கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வீடுகளில் AC பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால், மின்கட்டணம் எகிறாமல் இருக்க சில டிப்ஸ் இருக்கு: ➤5 Star ACகளைப் பயன்படுத்துங்கள் ➤8 ஆண்டுகளுக்கு மேல் ஒரே AC-ஐ யூஸ் பண்ணாதீங்க ➤டெம்ப்ரேச்சரை 24°C-26°C ல் வைப்பதே சிறந்தது ➤அறைக்குள் வெப்பத்தை அதிகரிக்கும் மின்சாதனங்களின் பயன்பாட்டை குறையுங்கள் ➤Fan-ஐ ON-ல் வையுங்கள். இதனால் கூலிங் அறையில் நன்கு பரவும். SHARE.
News March 23, 2026
ஒரேநேரத்தில் திமுகவுக்கு வந்த 3 சிக்கல்கள்

தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்படாத திமுக கூட்டணி கட்சிகள், இன்று ஒரே நாளில் ஆலோசனை நடத்தி வருவது கவனம் பெற்றுள்ளது. உயர்நிலைக் கூட்டத்தை விசிகவும், மா.செ.,க்கள் கூட்டத்தை தேமுதிகவும் தொடங்கி நடத்தி வருகின்றன. அதேபோல், திமுக அளிக்கும் 5 தொகுதிகளை ஏற்கலாமா என்பது பற்றி CPM அலுவலகத்தில் இன்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. திமுக தலைமையின் முடிவு என்னவாக இருக்கும்?


