News December 28, 2024

கள்ளசாராயம் விற்பனை செய்த பெண்ணுக்கு சிறை

image

பொன்விளைந்தகளத்தூர் அடுத்த புன்னப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரா. இவர், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி கள்ளசாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இவரை கைது செய்தனர். மேலும், இதுகுறித்த வழக்கு செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இந்திராவின் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.

Similar News

News August 5, 2025

செங்கல்பட்டில் ரயில்வே வேலை!

image

செங்கல்பட்டு மக்களே, இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்- 5623, டிக்கெட் சூப்பர்வைசர்- 6235, ரயில் மேனேஜர்- 7367, அக்கவுண்ட் அசிஸ்டெண்ட்- 7520, கிளர்க்- 7367 என மொத்தம் 30,307 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்திருந்தாலே போதும். ரூ.29,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு மேல்தான் <>இந்த இணையத்தளத்தில் <<>>விண்ணப்பிக்க முடியும். சேவ் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க!

News August 5, 2025

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வேலை!

image

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினருக்கு 2 (PLA) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த நபர்கள் <>இந்த இணையதளத்தின்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த தகுதியான நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 4, 2025

செங்கல்பட்டு மக்களே நம்பர் நோட் பண்ணிக்கோங்க

image

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 04) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!