News December 28, 2024
தமிழகமே கண்ணீரில் மூழ்கிய நாள்

கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ‘விஜயகாந்த்’ மறைந்ததன் முதலாம் ஆண்டு நினைவு நாளின்று. திரைத்துறையில் வெற்றிநடை போட்டு பின்னாளில் அரசியல் களத்திலும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆகும் வரை உயர்ந்தவர் விஜயகாந்த். தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கும் கேப்டன் குறித்த உங்களது பார்வையை பதிவு பண்ணுங்க.
Similar News
News August 19, 2025
மனிதக்கழிவை யாரும் அகற்றக்கூடாது: வன்னியரசு

தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கூடாது என அண்மையில் திருமா பேசியது சர்ச்சையான நிலையில், இதற்கு விளக்கமளித்த வன்னியரசு, தூய்மைப் பணிக்கு குறிப்பிட்ட சமூகத்தினரே பணியமர்த்தப்படுகிறார்கள். ஆகையால் இதை யோசித்து, சமூகநீதிப்பார்வையில் திருமாவளவன் கருத்து தெரிவித்ததாக கூறினார். எதிர்காலத்தில் எந்த சமூகத்தினரும் மனிதக்கழிவை அகற்றும் பணியை செய்யக்கூடாது என்பதே விசிகவின் தொலைநோக்கு பார்வை என்றார்.
News August 19, 2025
இன்று 186-வது உலக புகைப்பட தினம்

வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்வுகளை, ஒரு புகைப்படம் எளிதாக உணர்த்திவிடும். அப்படி பல புகைப்படங்கள் உலக வரலாற்றையே மாற்றியுள்ளன. அப்பேர்பட்ட புகைப்படங்களின் உன்னதத்தையும், புகைப்படக் கலைஞர்களின் திறனை பெருமைப்படுத்தும் விதமாகவும் 1839-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆக.19-ம் தேதி ‘உலக புகைப்பட தினம்’ கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று 186-வது புகைப்பட தினம். Share it!
News August 19, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 19 – ஆவணி 3 ▶ கிழமை: திங்கள் ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:00 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶ எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶ குளிகை: 12:00 PM – 1:30 PM ▶ திதி: ஏகாதசி ▶ சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.