News December 28, 2024

“அனைத்து கல்லூரிகளுக்கும் பாதுகாப்பு”

image

அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரி வளாகங்களில் ஜனவரிக்குள் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். அவர், “இதுபோன்ற பிரச்னை வந்தால் அதை விசாரிக்க
‘POSH கமிட்டி’ உள்ளது. ஆனால் அந்த மாணவி POSH கமிட்டியில் புகார் அளிக்கவில்லை. இனிவரும் காலங்களில், கல்லுாரி நிர்வாகத்தை கண்காணித்து இந்த குழுவிற்கு வரும் புகார்கள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

Similar News

News August 19, 2025

உசைன் போல்ட் பொன்மொழிகள்

image

* பந்தயத்தின் தொடக்கத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள், முடிவைப் பற்றிச் சிந்தியுங்கள்.
* உங்கள் கனவுகளை நம்புங்கள், எதுவும் சாத்தியமாகும்.
* மற்றவர்களின் விருப்பத்தைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு முதலிடம் கொடுங்கள்.
* உங்களை நீங்களே கடினமாகத் தள்ளிக்கொள்ள இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். ஆசைதான் வெற்றிக்கு முக்கியமாகும்.

News August 19, 2025

11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

கர்நாடகாவில் மழைத் தீவிரமடைந்துள்ளதால் KRS, கபினி அணைகளிலிருந்து 95,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு விரைவில் வரத்தொடங்கி இந்தாண்டில் 5-வது முறையாக நிரம்பும் வாய்ப்புள்ளது. இதனால் உபரிநீர் எந்த நேரத்திலும் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படலாம். இதனால் சேலம் உள்ளிட்ட காவிரி கரையோர 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

News August 19, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 432 ▶குறள்: இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. ▶ பொருள்: மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.

error: Content is protected !!