News December 28, 2024
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 28 ▶மார்கழி- 12 ▶கிழமை: சனி ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்:10:45 AM – 11:45 AM, 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶சூலம்: கிழக்கு ▶திதி: த்ரயோதசி ▶பரிகாரம்: தயிர் ▶நட்சத்திரம்: அனுஷம் ▶சந்திராஷ்டமம்: அசுவினி
Similar News
News July 9, 2025
மகாராஷ்டிராவை போன்று பிஹாரிலும் பாஜக சதி: ராகுல்

ECI உதவியோடு மகாராஷ்டிராவை போன்று பிஹார் தேர்தலிலும் முறைகேடு செய்ய பாஜக சதி செய்வதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அம்மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை ECI மேற்கொண்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அவர், ஏழை வாக்காளர்களை Voter List-ல் இருந்து நீக்க வாய்ப்புள்ளது என்றார்.
News July 9, 2025
₹10 யாசகம் போட்ட பெண்.. ரஜினிகாந்த் பேச்சு வைரல்

தனக்கு பெண் ஒருவர் ₹10 யாசகம் போட்டதாக ரஜினி பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது. பெங்களூருவில் உள்ள கோயிலுக்கு தாம் மாறு வேடத்தில் சென்று இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த பெண் தன் உருவத்தை பார்த்து பிச்சை எடுப்பவர் என கருதி ₹10 அளித்ததாகவும், அதை மறுக்காமல் தாம் வாங்கிக் கொண்டதாகவும், பிறகு உண்டியலில் தாம் ₹200 போட்டதை பார்த்து அவர் தன்னிடம் வருத்தம் தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.
News July 9, 2025
கேட் கீப்பர் தூங்கியதே விபத்துக்கு காரணம்!

கடலூர் செம்மங்குப்பத்தில் நேர்ந்த விபத்துக்கு கேட் கீப்பர் தூங்கியதே காரணம் என்பது தெரியவந்துள்ளது. 7.10 மணிக்கு ரயில் வருவது குறித்து அவருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கேட்டை மூடாமல் மீண்டும் தூங்கியுள்ளார். கேட்டை மூட மறந்துவிட்டதாக பங்கஜ் சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். So Sad!