News December 28, 2024

“மாணவர்களுடன் நான் உறுதுணையாக நிற்கிறேன்”

image

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் நான் உறுதுணையாக நிற்கிறேன். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும். அவரைப் போன்றவர்களை வெளியே விடக்கூடாது” என பதிவிட்டுள்ளார். இவ்வழக்கில் ஞானசேகர் என்பரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News July 9, 2025

கேட் கீப்பர் தூங்கியதே விபத்துக்கு காரணம்!

image

கடலூர் செம்மங்குப்பத்தில் நேர்ந்த விபத்துக்கு கேட் கீப்பர் தூங்கியதே காரணம் என்பது தெரியவந்துள்ளது. 7.10 மணிக்கு ரயில் வருவது குறித்து அவருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கேட்டை மூடாமல் மீண்டும் தூங்கியுள்ளார். கேட்டை மூட மறந்துவிட்டதாக பங்கஜ் சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். So Sad!

News July 9, 2025

4 ஆண்டுகளுக்கு பின் டெஸ்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர்

image

3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர் இணைந்துள்ளார். 3-வது டெஸ்டுக்கான அணியில் ஒரு மாற்றத்தை இங்கிலாந்து அணி செய்துள்ளது. அதன்படி 4 ஆண்டுகள் கழித்து டெஸ்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாட உள்ளார். முழு உடல் தகுதியை எட்டாததால் முதல் 2 டெஸ்டில் ஆர்சர் விளையாடவில்லை. ஜோஷ் டங்கிற்கு பதில் அவர் அணியில் இணைந்துள்ளதால் இங்கிலாந்து பந்து வீச்சு மேலும் வலுவடைந்துள்ளது.

News July 9, 2025

செயல்படாத ஜன் தன் கணக்குகள் முடக்கம்?

image

வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் வசதியுடன் ஜன் தன் சேமிப்பு கணக்கை மத்திய அரசு அளிக்கிறது. இக்கணக்கில் குறைந்தபட்ச பணம் எதுவும் இருப்பு வைக்க வேண்டியதில்லை என்பதால் நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், பல ஜன் தன் வங்கி சேமிப்பு கணக்குகள் செயல்படாமல் இருப்பதாகவும், அதை முடக்க அரசு உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதை மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது.

error: Content is protected !!