News December 27, 2024

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்,  அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்காக, அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி 05.01.2025 அன்று காலை 6.00 மணிக்கு பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார். 

Similar News

News August 23, 2025

காஞ்சிபுரம்: மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செப்டம்பர் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News August 22, 2025

காஞ்சிபுரம் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 22) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News August 22, 2025

காஞ்சிபுரத்தில் வீட்டு வரி கட்ட அலைய வேண்டாம்!

image

காஞ்சிபுரம் மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <>இந்த இணையதளம்<<>> மூலம் நீங்கள் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்.

error: Content is protected !!