News December 27, 2024
மன்மோகன் சிங்கின் மறுபக்கம்!

மாபெரும் எக்னாமிஸ்ட்டாக உலகம் அறிந்த மன்மோகன் சிங், ஓர் சிறந்த எழுத்தாளர் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?. இந்தியப் பொருளாதாரம், திட்டங்கள், வளர்ச்சி தொடர்பாக அவர் எழுதிய Changing India மற்றும் To the Nation, for the Nation ஆகிய புத்தகங்கள் அவரது பரந்த சிந்தனையை எடுத்துரைக்கின்றன. குறிப்பாக Changing India புத்தகம் 5 தொகுப்புகளைக் கொண்டது. முடிந்தால் இவற்றை வாங்கிப் படியுங்கள்..
Similar News
News September 12, 2025
ஷிவம் துபே தொட்டதெல்லாம் துலங்கும்

ஷிவம் துபே பிளேயிங் 11-ல் இடம்பெற்ற பெரும்பாலான போட்டிகளில் இந்தியா தோற்றதே கிடையாதாம். ஆம்.. டி20 கிரிக்கெட்டில் ஷிவம் துபே இந்தியாவுக்காக 36 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் தொடர்ச்சியாக 31 போட்டிகளில் இந்தியா தோற்கவே இல்லை. ஏறக்குறைய 6 ஆண்டுகளாக இந்த சாதனை தொடர்கிறது. இதனால் ரசிகர்கள் அவரை லக்கி ராம் துபே என செல்லமாக அழைக்க தொடங்கியுள்ளனர்.
News September 12, 2025
ALERT: தூங்கும் போது போனை பக்கத்தில் வைக்கிறீர்களா?

இரவு போனை பக்கத்திலேயே வைத்து தூங்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. அப்போது என்ன நடக்கிறது தெரியுமா? *நீங்க போனை யூஸ் செய்யலைனாலும், அது ஆக்டிவாகவே இருக்கும் *நீல ஒளி, மின்காந்த அலைகளை வெளிவிட்டுக் கொண்டிருக்கும் *மெலட்டோனின் ஹார்மோனை பாதிக்கும் *இதனால் நினைவாற்றல், கவனம் சிதறும் *ஆழமான தூக்கம் பாதிக்கும், மறுநாள் சோர்வு, பதற்றம் ஏற்படும். இதை தடுக்க, போனை பல அடி தூரம் தள்ளி வைக்கணும். செய்வீர்களா?
News September 12, 2025
டெட் தேர்வுக்கு 4.8 லட்சம் பேர் விண்ணப்பம்

டெட் தேர்வுக்கு சுமார் 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் டெட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ள நிலையில் போட்டி போட்டு பலரும் விண்ணப்பித்துள்ளனர். இம்முறை, இதற்கு முன்பு நடந்த 4 டெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவை காட்டிலும் அதிகம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டெட் தேர்வு நவ.15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறவுள்ளது.