News December 27, 2024
அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு, ஆரணி உள்ளிட்ட இடங்களில் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Similar News
News September 12, 2025
மூட்டு வலியால் அவதியா? இதை ட்ரை பண்ணுங்க!

மூட்டு வலி வந்தாலே நமது கான்பிடன்ஸ் குறைஞ்சிடும். தினசரி இயல்பு வாழ்க்கையே பாதிக்கும். பெயின் கில்லர்ஸ், வீட்டு மருத்துவம் போன்றவை சரியான தீர்வாகாது. நிரந்தர தீர்வுக்கான மருத்துவ செலவோ மிக அதிகம். இந்த சூழலில் உங்கள் மூட்டு வலியை குறைக்க அல்லது கட்டுப்பாட்டில் வைக்க உதவும் எளிய வழிகள் சிலவற்றை பரிந்துரைக்கிறோம். மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்கள். நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News September 12, 2025
பாஜக கொள்கையுடன் திமுக ஒத்துப்போகிறது: சீமான்

பாஜகவின் எல்லா கொள்கைகளோடும் திமுக ஆட்சி ஒத்துப்போவதாக சீமான் விமர்சித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து முதலில் பேரணி நடத்தியவர் CM ஸ்டாலின் என்றும் அதை ஆதரித்து உலகநாடுகளில் பிரதிநிதியாக பேசியவர் கனிமொழி எனவும் அவர் கூறினார். மேலும், பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போது திமுக குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசியதாகவும். தற்போது கூட்டணியில் இல்லாததால் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.
News September 12, 2025
திமுக ஆட்சியில் போலீசுக்கே பாதுகாப்பில்லை: EPS

திமுக ஆட்சியில் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை என EPS தெரிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களில் 6 போலீசார் கொலை செய்யப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். போலீசை கண்டால் குற்றம் புரிந்தவர்கள் பயப்பட வேண்டும். ஆனால் திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயம் இல்லை என்றும் அதனால் தான் தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகளவில் நடப்பதாகவும் EPS சாடினார்.