News March 24, 2024

தேர்தலில் கங்கனா ரனாவத் போட்டி

image

பிரபல நடிகை கங்கனா ரனாவத் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடவுள்ளார். டெல்லி பாஜக தலைமை அறிவித்திருக்கும் ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் கங்கனாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் கங்கனா போட்டியிட இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவுக்கு ஆதரவாக பேசிவரும் கங்கனாவுக்கு தலைமை இந்த முறை வாய்ப்பு வழங்கியிருக்கிறது.

Similar News

News October 25, 2025

திருச்சி: ரயில்வேயில் வேலை.. APPLY NOW!

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் முதல் <>www.rrbapply.gov.in <<>>என்ற இணையதளம் வாயிலாக நவ.,20 வரை விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News October 25, 2025

பழங்களை மட்டும் உணவாக சாப்பிடலாமா?

image

இன்றைய சூழலில் பல Diet முறைகள் வந்துள்ளன. அதில் ஒன்று Fruit Diet. நாள் முழுவதும் பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும். ஆனால் அவ்வாறு சாப்பிடக்கூடாது என்கின்றனர் டாக்டர்கள். பழங்கள் வைட்டமின்கள், நார்ச்சத்துகளை வழங்கும். ஆனால், புரதம், கொழுப்புகள் இல்லாததால், உடலுக்கு போதுமான ஆற்றலை வழங்காது. எனவே பழங்களுடன் தானியங்கள், நட்ஸ், முட்டை உள்ளிட்ட உணவுகளையும் சேர்க்க வேண்டும் என்பதே டாக்டர்களின் அட்வைஸ்.

News October 25, 2025

தாய்லாந்து ராணி காலமானார்!

image

தாய்லாந்து முன்னாள் ராணி மதர் சிரிகிட்(93) காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே, உடல் நலக்குறைவால் அவர் பொது வாழ்வில் இருந்து விலகி இருந்தார். கிராமப்புற ஏழைகளுக்கு உதவவும், பாரம்பரிய கைவினைப் பொருள்களை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மதர் சிரிகிட் பல திட்டங்களைத் அந்நாட்டில் தொடங்கினார். இவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 12-ம் தேதி அன்னையர் தினமாக தாய்லாந்து முழுவதும் கொண்டாடப்படுகிறது. #RIP

error: Content is protected !!