News December 27, 2024
ஏக்கருக்கு ரூ.5400 மானியம்: தூத்துக்குடி கலெக்டர்

தூத்துக்குடி மாவட்ட தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடி உற்பத்தி மற்றும் பரப்பளவை அதிகரிக்க செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5,400 பின்னேற்பு மானியம் வழங்கப்பட உள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News August 30, 2025
தசரா திருவிழா; சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி மற்றும் தீபாவளி பண்டிகைகள் நெருங்குவதால், தூத்துக்குடி-திருச்செந்தூர் இடையே கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், மத்திய அமைச்சர் எல். முருகனிடம் மனு அளித்தார்.
News August 30, 2025
தூத்துக்குடி: இரவு ரோந்து காவலர் எண் வெளியீடு

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று இரவு ரோந்து காவல்துறை போலீசாரின் விவரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக தூத்துக்குடி டிஎஸ்பி மதன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலீசார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் தொடர்பு எண் மேலே உள்ள படத்தில் உள்ளது.
News August 29, 2025
திருச்செந்தூர் கோவிலில் தரிசன நேரத்தில் மாற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் செப்டம்பர் 7, 2025 ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணத்தை முன்னிட்டு பக்தர்கள் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மதியம் 2 மணி வரை மட்டுமே பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர், மறுநாள் முதல் மீண்டும் தரிசனம் அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. *ஷேர்*