News December 27, 2024
சிறுமிக்கு பாலியல் தொல்லை – தந்தை கைது
புதுச்சேரியை சேர்ந்த 38 வயது நபர், தனது மனைவியை விட்டு பிரிந்து, பிளஸ் 2 படிக்கும் தனது 17 வயது மகளுடன் வசிக்கிறார். மது போதையில், தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். நடந்த சம்பவத்தை, அச்சிறுமி தனது தாயிடம் கூறினார். இது குறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, சிறுமியின் தந்தையை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 28, 2024
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: அரசு அறிவிப்பு
புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை உயர்த்த கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி பெட்ரோல் வரி 2.44 சதவீதமும், டீசல் 2.57 சதவீதமும் உயர்கிறது. இந்த உயர்வு புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிரதேசங்களிலும் அமலாகிறது. ஜனவரி 1 முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படும் என புதுவை அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
News December 28, 2024
கல்வித்துறையில் பணியாற்றும் பால சேவிகாக்கள் இடமாற்றம்
புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், காரைக்காலில் செயல்படும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பால சேவிகாக்கள் 7 பேர் புதுச்சேரி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஏழு பால சேவிகாக்காள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
News December 28, 2024
புதுவை சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கை
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆன்லைனில் தங்கும் விடுதிகளை தேடும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து, மோசடி கும்பல் ஓட்டல்களின் போலியான இணையதளத்தை உருவாக்கி பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் ஆன்லைனில் அறைகளை முன்பதிவு செய்யும் முன் ஓட்டல் இணையதளத்தின் உண்மை தன்மையை கண்டறிந்து முன் பணம் செலுத்த வேண்டும் என புதுவை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.