News December 27, 2024
2024ல் மண்ணை விட்டு பிரிந்த திரை பிரபலங்கள்

இந்திய திரை உலகம் இந்த ஆண்டு பல துயர்களை கண்டுள்ளது. தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் ஹுசேனும், இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர் ஷியாம் பெனகலும் நோயால் மரித்தனர். மேலும், இசைக்கலைஞர் உஸ்தாத் ரஷித் கான், கசல் பாடகர் பங்கஜ் உதாஸ், தெலுங்கு ஊடக லெஜண்ட் ராமோஜி ராவ், நடிகர்கள் டேனியல் பாலாஜி, சூர்யா கிரண், நடிகைகள் சுஹானி, பவித்ரா ஜெயராமன், நாட்டுப்புற பாடகி ஷ்ரத்தா உள்ளிட்ட பலரும் இம்மண்ணை விட்டு பிரிந்தனர்.
Similar News
News October 1, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 1, புரட்டாசி 15 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: நவமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை
News October 1, 2025
கரூர் சம்பவம்: அரசு வேலை வழங்க BJP வலியுறுத்தல்

கரூர் சம்பவம் தொடர்பாக SC நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை தேவை என்று அனுராக் தாகூர் வலியுறுத்தியுள்ளார். BJP அமைத்த குழுவினர், கரூரில் நேரில் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இச்சம்பவத்தின் போது போலீஸ் என்ன செய்து கொண்டிருந்தது என ஆளுங்கட்சி பதிலளிக்க வேண்டும் என்றார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கவும் அனுராக் வலியுறுத்தினார்.
News October 1, 2025
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி

மிக நீண்ட இழுபறிக்கு பிறகு இந்த ஆண்டின் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியான படம் ‘மதகஜராஜா’. நடப்பு ஆண்டில் முதல் வெற்றி படமாகவும் இது அமைந்தது. இந்நிலையில், இப்பட கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பது மட்டுமல்லாமல், விஜய் ஆண்டனியும் இசையமைக்கவுள்ளாராம். இப்படத்தின் ஷூட்டிங் நவம்பரில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.