News December 27, 2024
எளியவர்களுக்கும் அதிகாரம் அளித்த தலைவர்

மன்மோகன் சிங் ஆட்சியில், சில திட்டங்கள் சாதாரண குடிமகனுக்கு அதிகாரம் அளிப்பதாக அமைந்தது. அப்படிதான், தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், அரசு துறைகள் மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்கள் சார்ந்த முக்கிய தகவல்களை கேட்டு பெறும் அதிகாரம் சாதாரண மனிதனுக்கும் கிடைத்தது. மேலும், எல்.பி.ஜி. கொள்கை, ஆதார் அட்டை திட்டம் உள்ளிட்டவையும் அவர் அறிமுகம் செய்தவையே.
Similar News
News August 16, 2025
ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த CM ஸ்டாலின்

திரையுலகில் 50 ஆண்டுகளை தொட்ட ரஜினிக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையுலகில் நுழையும் போது இருந்த துடிப்பும், வேகமும் இன்றும் ரஜினியிடம் இருப்பதை ’கூலி’ படத்தில் பார்த்து தெரிந்துக்கொண்டதாகவும், ’பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா’ என்ற பாடல் வரிகள் மிகப் பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
தீபாவளி பரிசால் ஷாக் ஆகும் மது பிரியர்கள்

தீபாவளி பரிசாக GST வரி முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக மோடி நேற்று அறிவித்தார். தற்போது 5 விதமாக இருக்கும் GST வரி, 2 விதமாக (5%, 18%) மாற்றப்படவுள்ளன. இதில் ஆடம்பரப் பொருட்கள், மதுபானங்களுக்கு மட்டும் 40% சிறப்பு வரி விதிக்கப்படும் என கூறப்படுகிறது. தீபாவளிக்கு அதிகளவில் விற்பனையாவது ஆடம்பரப் பொருட்கள், மதுபானம் தான். இது தீபாவளி பரிசு அல்ல சுமை என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
News August 16, 2025
பாரதமும் சனாதனமும் ஒன்று: R.N.ரவி

1,000 வருடங்களுக்கு முன்பு நோய் ஏற்படாததற்கு சனாதன தர்மமே காரணம் என்று கவர்னர் R.N.ரவி தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பேசிய அவர், பாரதமும் சனாதனமும் ஒன்று, அதனைப் பிரிக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது என்றார். வேதங்கள் மூலமாகவே இந்த நாடு ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, உதயநிதி, சனாதனத்தை டெங்கு உடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு கவர்னர் கண்டனம் தெரிவித்திருந்தார்.