News December 26, 2024
அல்லு அர்ஜுன் மீது எனக்கென்ன கோபம்?

சினிமா பிரபலங்கள் உடன் நடந்த சந்திப்பில், தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி, எனக்கு சிறு வயதில் இருந்தே அல்லு அர்ஜுனை தெரியும். தனிப்பட்ட கருத்துகளை பொருட்படுத்தாமல், சட்டப்படி செயல்பட வேண்டும் என்பதே என் கொள்கை. நடிகர்கள் தங்கள் ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும். சினிமாத்துறை பொறுப்புடன் இருக்க வேண்டும் எனக் கூறினார். சினிமா பிரச்னைகளை தீர்க்க அமைச்சரவை துணைக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
Similar News
News September 11, 2025
ராகுல் காந்திக்கு உயிர் மீது அக்கறை இல்லையா?

வெளிநாடு செல்லும் போதெல்லாம் பாதுகாப்பு நடைமுறைகளை மீறுவதாக ராகுல் காந்திக்கு CRPF கடிதம் எழுதியுள்ளது. யாரிடமும் சொல்லாமல் திடீரென வெளிநாடு செல்வதாகவும், பாதுகாப்பு நடைமுறைகளை அவர் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக, 2020 – 2022-ல் 113 முறை புரோட்டோகால்களை மீறியதாக கடந்த 2022-ல் CRPF குற்றஞ்சாட்டியது. ராகுலுக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
News September 11, 2025
Beauty: 1 வாரத்தில் கருவளையம் நீங்க செம்ம டிப்ஸ்!

அதிக Stress, டென்ஷனால் கண்ணுக்கு கீழ் கருவளையம் வந்துவிட்டதா? கருவளையம் வந்துவிட்டதே என எண்ணி மேலும் Stress ஆகுறீங்களா? கவலையவிடுங்க. இதனை எளிமையான முறையில் சரி செய்யலாம். உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து அந்த பேஸ்டை கருவளையம் இருக்கும் இடத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதை ஒரு வாரத்திற்கு செய்து வந்தால் கருவளையம் நீங்கும். SHARE.
News September 11, 2025
விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? வெளியான தகவல்

திருச்சியில் நாளை மறுநாள் விஜய் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். இதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தவெகவினர் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில், திருச்சி கிழக்கு, திருவாடானை, மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளில் விஜய்-க்கு செல்வாக்கு இருப்பதும், இதில், திருச்சி கிழக்கில் போட்டியிட்டால் அவரின் வெற்றி உறுதி எனவும் தெரியவந்துள்ளது. இதனால்தான், திருச்சியை மையமாக வைத்து, பரப்புரையை தொடங்குகிறாராம்.