News December 26, 2024
நல்லக்கண்ணுவிற்கு புகழ் வணக்கம்: விஜய்

நூற்றாண்டு காணும் நல்லக்கண்ணுவை போற்றிப் புகழ்ந்து வணங்குவோம் என விஜய் தெரிவித்துள்ளார். தங்களுக்கான நிதியை மட்டுமே திரட்டும் அரசியல்வாதிகள் இடையே, தனக்குக் கிடைத்த நிதி அனைத்தையும் தான் சார்ந்த இயக்கத்திற்கும் விவசாயிகளுக்கும் அரசுக்கும் கொடுத்த உத்தமர் எனவும் அவரை விஜய் புகழ்ந்துள்ளார். மேலும், தமிழகத்தின் தனிப்பெரும் சமூக, அரசியல் அடையாளமாக உயர்ந்து நிற்பவர் என்றும் அவரை குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 11, 2025
வீட்டை இலவச பள்ளியாக மாற்றும் ராகவா லாரன்ஸ்

பிறருக்கு ஒன்று என்றால் ஓடோடி சென்று உதவும் முதல் மனிதராக இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.
இந்நிலையில், தான் வாழ்ந்த வீட்டை பள்ளிக் கூடமாக மாற்றி இலவச கல்வி வழங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். தனது அறக்கட்டளையில் வளர்ந்து, ஆசிரியராக உள்ள பெண்ணை வைத்து, இப்பள்ளியை தொடங்க திட்டமிட்டுள்ளாராம். காஞ்சனா- 4 படத்துக்கு கிடைத்த முன்பணத்தின் மூலம் இப்பள்ளியை தொடங்க உள்ளாராம்.
News September 11, 2025
இது மகளிரின் காலம்: ICC போட்ட புது ரூல்

மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை வரும் 30-ம் தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது. மகளிர் கிரிக்கெட்டில் வழக்கமாக ஆண்களும், பெண்களும் கலந்துதான் நடுவர்களாக செயலாற்றுவார்கள். ஆனால், இந்த WC-யில் புதிய மாற்றத்தை ICC கொண்டுவந்துள்ளது. அதன்படி, மகளிர் மட்டுமே நடுவர்களாக இதில் பங்கேற்க உள்ளனர். பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், இந்த முன்னெடுப்பை செய்துள்ளதாக ICC தலைவர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
BREAKING: மிகப்பெரிய என்கவுன்டரில் 10 பேர் மரணம்

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மிகப்பெரிய துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. கரியாபாத்தில் நடந்த இந்த மோதலில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் மாவோயிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் மனோஜ் என்ற மோடம் பாலகிருஷ்ணாவும் ஒருவர் என்றும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், பாதுகாப்பு படை, மாவோயிஸ்டுகளை தொடர்ந்து தேடி வருகிறது.