News March 24, 2024
திண்டுக்கல்: அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி

வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்கம் குறித்து ஆட்சியர் ஆட்சித்தலைவர் பூங்கொடி கலந்துரையாடினார். அருகில் மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேஸ்வரி, வேடசந்தூர் வட்டாட்சியர் விஜயலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.
Similar News
News April 20, 2025
விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7, 8, 9, 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை மே 5-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News April 20, 2025
திண்டுக்கல் போக்குவரத்து கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 60 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. <
News April 20, 2025
4 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தம்பதி தற்கொலை முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கடம்பன் குளம் அருகே நான்கு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததோடு கணவன் மனைவி தற்கொலைக்கு முயற்சி; கணவன் கவலைக்கிடம், மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுக்கு ஆறு மருத்துவர்கள் கொண்ட குழு ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.