News December 26, 2024
காவல்துறை பொறுப்போடு செயல்பட வேண்டாமா?

அண்ணா யூனிவர்சிட்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவியின் அடையாளங்கள் அடங்கிய FIRஐ போலீசார் சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அந்த FIRஇல் அவரது பெயர், வயது, முகவரி ஆகிய தகவல்கள் அடங்கியுள்ளன. அதோடு, குற்றவாளி எப்படிப்பட்ட சீண்டல்களில் ஈடுபட்டார் என்ற முகம் சுளிக்க வைக்கும் தகவலும் உள்ளன. போலீஸ் கவனமாக இருக்க வேண்டாமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Similar News
News July 8, 2025
முடிவுக்கு வரும் மாறன் சகோதரர்களின் பிரச்னை?

<<16753727>>மாறன் சகோதரர்களிடையேயான சொத்துப் பிரச்னையில்<<>> CM ஸ்டாலின் தலையிட்டு சமாதானம் செய்து வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரையும் நேரில் சந்தித்த அவர், ஒற்றுமையாகவும் இணக்கமாகவும் செயல்பட அறிவுரை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தம்பி தயாநிதி மாறனுக்கு கூடுதல் பங்குகளை விட்டுக்கொடுக்க கலாநிதி மாறன் முன்வந்திருக்கிறாராம். ஆனால், இதுகுறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
News July 8, 2025
பாரத் பந்த்… பள்ளி, கல்லூரிகள் நாளை இயங்குமா?

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நாளை (ஜூலை 9) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. அதில், தமிழகத்திலும் ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனால், அத்தியாவசிய பணிகள் பாதிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், பள்ளிகள் வழக்கம்போல் இயங்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இரவுக்குள் வெளியாகுமா?
News July 8, 2025
2-வது டெஸ்டிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி

2-வது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா கேப்டன் முல்டரின்(367) முச்சதத்தால் 626 ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா டிக்ளேர் செய்ததால் களமிறங்கிய ஜிம்பாப்வே 170 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாலோ ஆன் ஆனது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே 220 ரன்களில் ஆல் அவுட்டாகியது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.