News March 24, 2024
திருவாரூர் தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி

ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பணியில் ஈடுபடும் தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. பல்வேறு பிரிவு அலுவலர்களின் பணி விவரங்கள் வீடியோ மூலம் விளக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பயிற்சி முகாமை பார்வையிட்டார். தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News December 13, 2025
திருவாரூர்: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்

திருவாரூர் மாவட்டம் ஜாக்டோ ஜியோ சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற கோரி இன்று (டிசம்பர் 13) உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. திருவாரூர் புதிய பேருந்து நிலையம் விளமல் பகுதியில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நடைபெறுகிறது.
News December 13, 2025
திருவாரூர்: அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு!

திருவாரூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News December 13, 2025
திருவாரூர்: ரேஷன் பொருட்கள் பெற இதை செய்ங்க

திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மானிய பொருட்களை பெற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைரேகை மூலம் ஆதார் எண்ணை பதிவு செய்ய இன்றும் (டிச.13) நாளையும் (டிச.14) மற்றும் டிச.19 & 20 ஆம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


