News December 26, 2024
சுனாமி: 20ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை. தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலால், சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஷேர் பண்ணுங்க
Similar News
News August 29, 2025
சென்னையில் வரும் 2, 3ம் தேதிகளில் ட்ரோன் பறக்க தடை!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் 2ம் தேதி அரசு முறை பயணமாக சென்னை வருகிறார். அன்று மதியம் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர், 3ம் தேதி விமானம் மூலம் திருச்சிக்கு புறப்படுகிறார். எனவே, சென்னை விமான நிலையம், வர்த்தக மையம், ராஜ் பவன் மற்றும் குடியரசுத் தலைவரின் வாகனம் செல்லும் வழித்தடங்களில் ட்ரோன்கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.
News August 28, 2025
சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (ஆகஸ்ட். 28) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
News August 28, 2025
சென்னைக்கு வருகை தரும் குடியரசுத் தலைவர்

சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சென்னை வருகை தருகிறார். சென்னை வந்தடைந்த பிறகு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இரு நாட்கள் நடைபெறும் இந்தச் சுற்றுப்பயணத்தின் போது மாநில தலைவர்கள், நீதித்துறை பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களையும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.