News December 26, 2024
ஜனவரி 1 முதல் வரும் மாற்றங்கள்

* ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் கேஸ் சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படும். அந்த வரிசையில் இந்த ஜனவரி 1ஆம் தேதி மாற்றம் வரலாம்.
* பங்குச்சந்தை Options Expiry தேதிகளை NSE மாற்றியுள்ளது.
* GST செலுத்தும் அனைவருக்கும் MFA (Multi Factor Authentication) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* பங்குச்சந்தையில் ITC நிறுவனத்தில் இருந்து ஓட்டல் தொழில் தனியாக பிரிகிறது.
* பழைய ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் வாட்ஸாப் இயங்காது.
Similar News
News September 11, 2025
ரிலீஸாகி மூன்றே ஆண்டில் ரீரிலீஸாகும் படம்

தமிழ் சினிமாவில் ரீரிலீஸ் கலாசாரம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், 2022-ல் வெளியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படம் செப்.19-ல் ரீரிலீஸாகிறது. விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஃபீல் குட் படமாக வெற்றி பெற்ற இப்படத்தை மீண்டும் தியேட்டரில் கொண்டாடுவர் என படக்குழு நம்புகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க?
News September 11, 2025
இதவிட எனக்கு முக்கியமான வேலை இருக்கு: அன்புமணி

கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக கூறி, பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து அன்புமணியிடம் கேட்டதற்கு, ‘இதைவிட எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது’ என பதிலளித்துள்ளார். மேலும், வழக்கறிஞர் பாலு விரிவாக இது பற்றி விரிவாக பேசுவார் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், பாமக விதிகளின் படி நிறுவனரான ராமதாஸின் அறிவிப்பு செல்லாது என பாலு கூறியுள்ளார்.
News September 11, 2025
இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர வேண்டாம்: அரசு வார்னிங்

இந்தியர்கள் மீண்டும் ரஷ்ய ராணுவத்தில் சேர்வதாக தகவல்கள் வெளியான நிலையில், இது மிக ஆபத்தானது என இந்திய அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளுடன் பேசிவருவதாகவும், உடனே இந்தியர்களை விடுவிக்க கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, ரஷ்யாவில் அதிக சம்பளத்தில் வேலை என கூறி ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் சேர்க்கப்பட்டனர். இந்திய அரசின் முயற்சியால் அவர்களில் 98 பேர் மீட்கப்பட்டனர்.