News December 26, 2024
பிரபல எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் மறைந்தார்

நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான எம்.டி. வாசுதேவன் (91) காலமானார். கோழிக்கோட்டில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த வாசுதேவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏராளமான புத்தகங்கள், நாவல்கள் எழுதியுள்ள அவர், மலையாள படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். சில படங்களை இயக்கவும் செய்துள்ளார். அவர் கலைசேவைக்காக தேசிய விருது, ஞானபீட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
Similar News
News July 8, 2025
தனுஷுக்கு ஜோடியான மமிதா பைஜூ!

இளம் சென்சேஷன் மமிதா பைஜூ தான் தற்போது பல முன்னணி நடிகர்களின் சாய்ஸ். ஜனநாயகன், சூர்யா 46, Dude என தொடர்ந்து பெரிய படங்களில் நடித்து வரும் அவர் தற்போது அடுத்த பெரிய புராஜெக்டையும் பிடித்து விட்டார். ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் தனுஷின் அடுத்த படத்தில் ஹீரோயினாக மமிதா கமிட்டாகி இருக்கிறார். இவுங்க ஜோடி எப்படி இருக்கும்?
News July 8, 2025
ஆண்களை பாதிக்கும் வெரிக்கோசில்

குழந்தையின்மை பிரச்னைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை & தரக் குறைவு. இதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று வெரிக்கோசில் பிரச்னையாகும். விதைப்பைகளுக்கு செல்லும் ரத்தக் குழாய் வீங்குவதே வெரிக்கோசில். இதனால், விதைப்பைகளுக்கு ரத்தவோட்டம் பாதிப்பதால், விந்தணு உற்பத்தி பாதித்து எண்ணிக்கையும் தரமும் குறையும். இப்பிரச்னை உள்ளோர் உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டும்.
News July 8, 2025
வெரிக்கோசில் அறிகுறிகள் தெரியுமா?

விதைப்பைகளுக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படுவதால் வெரிக்கோசில் ஏற்படுகிறது. இதன் முக்கிய அறிகுறிகள்: விதைகளில் மிதமானது முதல் தீவிர வலி *ரத்தக் குழாய்களில் வீக்கம் தெளிவாக தெரிவது *விதைகள் அவற்றின் வழக்கமான அளவிலிருந்து சிறிதாகுதல் *நீண்ட நேரம் நின்றாலோ, எடை தூக்கினாலோ அசவுகரியமாக உணர்வது. இந்த அறிகுறிகள் இருந்தால், உடனே டாக்டரை ஆலோசியுங்கள்.