News December 25, 2024

புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் கடன்.. உடனே APPLY

image

டான்சீட் திட்டத்தின்கீழ் அரசு பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு, பெண்களை பங்குதாராராக கொண்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் கடன் அளிக்கிறது. மற்ற புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்குகிறது. இதன்கீழ் கடன் பெற விரும்பும் நபர்கள், <>www.startuptn.in <<>>என்ற இணையதளத்தில் உடனே விண்ணப்பிக்கும்படி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.

Similar News

News July 8, 2025

பள்ளி வேன் விபத்து… அதிர்ச்சியூட்டும் புதிய திருப்பம்

image

கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே கேட்டை வேன் ஒட்டுநர் அலட்சியமாக கடந்ததாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால், கேட் கீப்பர் தூங்கியதால் இந்த கோர விபத்து நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்கு பிறகும் கேட் கீப்பர் வெளியே வரவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அலட்சியத்தால் 3 மாணவர்கள் பலியானது பெரும் சோகம்.

News July 8, 2025

அன்புமணியை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்

image

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவெளியில் ராமதாஸின் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் நிறுவன தலைவருக்கு களங்கம் உருவாக்கும் வகையிலான செயல் கண்டிக்கத்தக்கது எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் தனது மகள் காந்திமதியை, ராமதாஸ் மேடையில் அமர வைத்தது குறிப்பிடத்தக்கது.

News July 8, 2025

தனுஷுக்கு ஜோடியான மமிதா பைஜூ!

image

இளம் சென்சேஷன் மமிதா பைஜூ தான் தற்போது பல முன்னணி நடிகர்களின் சாய்ஸ். ஜனநாயகன், சூர்யா 46, Dude என தொடர்ந்து பெரிய படங்களில் நடித்து வரும் அவர் தற்போது அடுத்த பெரிய புராஜெக்டையும் பிடித்து விட்டார். ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் தனுஷின் அடுத்த படத்தில் ஹீரோயினாக மமிதா கமிட்டாகி இருக்கிறார். இவுங்க ஜோடி எப்படி இருக்கும்?

error: Content is protected !!