News March 24, 2024

பாஜகவிற்கு பயம் வந்துவிட்டது

image

வடகிழக்கு மாநிலங்களில் போட்டியிட பாஜகவிற்கு பயம் வந்துவிட்டதால் தான், அவர்கள் அங்கு போட்டியிடாமல் இருக்கிறார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், “பாஜகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் தோற்பது 100% உறுதி. முதல்வர் ஸ்டாலின் கை நீட்டுபவரே அடுத்த பிரதமர்” எனக் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்படவுள்ளன. விண்ணப்பிப்பவர்கள் 24 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். மாதச் சம்பளம் ₹23,000 இருந்து வழங்கப்படும். <>முழு தகவலுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும். <<>>

News April 20, 2025

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் கீழ் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். தற்போது, இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசின் செயல்பாடுகள் (அ) கொள்கைகள் தொடர்பான புத்தகங்களை தவிர, இலக்கியம், நாவல், கவிதை, தொழில்முறை உள்ளிட்ட புத்தகங்களை வெளியிட அனுமதி பெற வேண்டியதில்லை. அதேநேரம், தகுதியான அதிகாரிக்கு முறைப்படி தகவல் தெரிவித்து இனி புத்தகங்களை வெளியிட வேண்டும்.

News April 20, 2025

ஈஸ்டர் பண்டிகையின் வரலாறு

image

கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது, இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட 3-ம் நாள், அவருடைய சீடர்கள் கல்லறைக்கு சென்ற போது கல்லறை காலியாக இருந்தது. எனவே அந்த நாளில் இயேசு கிறிஸ்து மரணத்தை வென்றார் என்று நம்பப்படுகிறது. கிறிஸ்துமஸைப் போல் அல்லாமல், உயிர்த்தெழுதலின் அடையாளமாக ஈஸ்டர் ஒவ்வொரு ஆண்டும் ஒரே தேதியில் வருவது இல்லை.

error: Content is protected !!