News December 25, 2024
சென்னையில் பெறப்பட்ட 37,371 புகார்கள்

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதாக 17,235 புகார்கள் பெற்றப்பட்டுள்ளன. குறிப்பாக 1913 அவசர கால கட்டுப்பாட்டு அறை மூலம், சென்னை மாநகராட்சியில், உள்ள 15 மண்டலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து நேற்று முன்தினம் வரை, பொதுமக்களிடம் இருந்து 37,371 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
Similar News
News August 28, 2025
சென்னைக்கு வருகை தரும் குடியரசுத் தலைவர்

சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சென்னை வருகை தருகிறார். சென்னை வந்தடைந்த பிறகு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இரு நாட்கள் நடைபெறும் இந்தச் சுற்றுப்பயணத்தின் போது மாநில தலைவர்கள், நீதித்துறை பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களையும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News August 28, 2025
சென்னை: பெண் குழந்தை இருக்கா? (1/2)

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ▶️ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. ▶️2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. ▶️இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். ▶️இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க (<<17541388>>தொடர்ச்சி<<>>)
News August 28, 2025
பெண் குழந்தை இருக்கா? (2/2)

இத்திட்டத்தில் பயன்பெற குடும்பத்தில் 1 பெண் குழந்தை (அ) 2 பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். (SHARE)