News December 25, 2024

கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய இளமை நாயகன் ❤️

image

கிறிஸ்துமஸ் பண்டிகையை சிஎஸ்கே நாயகன் தோனி, Santa Claus வேடமிட்டு குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடினார். தனது மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் போட்டோவில் கிறிஸ்துமஸ் தாத்தாவாகவே காட்சியளிக்கும் அவர், மற்றொரு போட்டோவில் கால் மேல் கால் போட்டு கெத்தாக சேரில் அமர்ந்திருக்கிறார். இதனை பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள், அடுத்த ஐபிஎல்லில் “தாத்தா வராரு கதற விட போறாரு என ❤️ பறக்க விடுகின்றனர்.

Similar News

News July 8, 2025

FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்

image

இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 85 புள்ளிகள் சரிந்து 83,356 புள்ளிகளிலும், நிஃப்டி 14 புள்ளிகள் சரிந்து 25,446 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது. நேற்று மாலை சற்று ஏற்றத்துடன் நிறைவடைந்த சந்தை இன்று சற்று சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

News July 8, 2025

திக்வேஷ் ரதிக்கு ஏறும் மவுசு

image

டெல்லி பிரீமியர் லீக் ஏலம் நேற்றைய முன்தினம் (ஜூலை 6) நடைபெற்றது. இதில், திக்வேஷ் ரதியை ₹38 லட்சத்துக்கு South Delhi Superstarz அணி வாங்கியுள்ளது. இது, அவர் IPL 2025 மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட தொகையைவிட அதிகமாகும். LSG அணியால் ₹30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட அவர், கடந்த சீசனில் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும், திக்வேஷ் ரதிக்கு அடுத்தடுத்து வரவேற்பு அதிகரித்து வருகிறது.

News July 8, 2025

இருட்டிலும் இக்கட்டிலும் உள்ளது இபிஎஸ்தான்: துரைமுருகன்

image

இருட்டிலும் இக்கட்டிலும் மாட்டிக் கொண்டிருப்பது இபிஎஸ்தான் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக, இருளை அகற்றி தமிழகத்தில் ஒளி வீசச் செய்வதே தன்னுடைய தீராத ஆசை என்ற இபிஎஸ்-ன் கருத்துக்கே இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார். ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுகவின் பிரசாரப் பயணத்தின்போது திமுகவின் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதை மக்களிடம் கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!