News December 25, 2024
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது. நேற்று ஒரு டாலரின் மதிப்பு ₹85.18ஆக இருந்த நிலையில், இன்று மேலும் சரிந்து ₹85.41ஆக உள்ளது. இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய், தங்கம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களின் விலை கடுமையாக உயரும் சூழல் உருவாகியுள்ளது. அதேநேரம் IT, Pharma உள்ளிட்ட ஏற்றுமதி துறைகளின் லாபம் அதிகரிக்கும்.
Similar News
News September 11, 2025
கட்சி பொறுப்பில் இருந்து கூண்டோடு நீக்கம்

காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் உச்சம் தொட்ட நிலையில், கோவையில் 3 தலைவர்களை கூண்டோடு நீக்கி தலைமை உத்தரவிட்டுள்ளது. மாநகர் மாவட்ட தலைவர் கருப்புசாமி, வடக்கு மாவட்ட தலைவர் VMC மனோகரன், தெற்கு மாவட்ட தலைவர் N.K.பகவதி மூவரும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகளை குறிவைத்து தலைமை நகர்ந்தாலும், நிர்வாகிகளிடையே உள்கட்சி பூசல் விவகாரம் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
News September 11, 2025
வீட்டில் மின்சாரம் சேமிக்க இதை ட்ரை செய்து பாருங்க!

*ஃபேன், டியூப் லைட்டுகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். *இன்டெக்ஷன் ஸ்டவ்களில் அடிப்பாகம் அகலமான பாத்திரங்களை யூஸ் பண்ணுங்க. *ஃபிரிட்ஜ்களில் அதிகமான பொருள்கள் இருப்பதன் மூலம் குளிர் தன்மையை நீண்ட நேரம் பாதுகாத்து மின்சாரம் மிச்சமாகும். * வீட்டில் சுவற்றின் பெயிண்ட்களுக்கு அடர்த்தி குறைந்த நிறங்களை தேர்வு செய்யலாம். *மிக முக்கியமாக தேவையில்லாத நேரங்களில் லைட், ஃபேன்களை OFF பண்ணிடுங்க. SHARE IT.
News September 11, 2025
FLASH: 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. வெளியே செல்வோர் குடையை ரெடியா எடுத்துட்டு போங்க.