News December 25, 2024
ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசில் 224 பணிகள்

மத்திய அரசின் கொச்சி கப்பல் கட்டும் (Cochin Shipyard Limited) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெல்டர், ப்ளம்பர், பெயிண்டர், எலெக்ட்ரிஷியன் என மொத்தம் 224 பணியிடங்கள் உள்ளன. தொழில் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியாக தேர்வு மற்றும் திறன் தேர்வு நடத்தப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.12.2024. இந்த லிங்கில் விண்ணப்பிக்கவும் https://cochinshipyard.in/
Similar News
News July 8, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹400 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 8) சவரனுக்கு ₹400 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,060-க்கும், சவரன் ₹72,480-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி 1 கிராம் ₹120-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,20,000-க்கும் விற்பனையாகிறது.
News July 8, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்

இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 85 புள்ளிகள் சரிந்து 83,356 புள்ளிகளிலும், நிஃப்டி 14 புள்ளிகள் சரிந்து 25,446 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது. நேற்று மாலை சற்று ஏற்றத்துடன் நிறைவடைந்த சந்தை இன்று சற்று சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
News July 8, 2025
திக்வேஷ் ரதிக்கு ஏறும் மவுசு

டெல்லி பிரீமியர் லீக் ஏலம் நேற்றைய முன்தினம் (ஜூலை 6) நடைபெற்றது. இதில், திக்வேஷ் ரதியை ₹38 லட்சத்துக்கு South Delhi Superstarz அணி வாங்கியுள்ளது. இது, அவர் IPL 2025 மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட தொகையைவிட அதிகமாகும். LSG அணியால் ₹30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட அவர், கடந்த சீசனில் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும், திக்வேஷ் ரதிக்கு அடுத்தடுத்து வரவேற்பு அதிகரித்து வருகிறது.