News December 25, 2024

வாடகை கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் தனியார் ஓட்டல்கள்

image

2024இல் அறைகளின் வாடகை கட்டணத்தை தனியார் ஓட்டல்கள் உயர்த்தின. 2025 ஆண்டிலும் வாடகை கட்டணத்தை 15% வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டு இறுதியான இந்த மாதத்தில் முன்னணி ஓட்டல்களில் அனைத்து அறைகளும் முன்பதிவாகி விட்டன. இதேபோல், 7%-8% வரை வாடகை அறைகளுக்கான தேவை அதிகரித்திருப்பதால் கட்டண உயர்வு முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Similar News

News July 8, 2025

வரலாற்றில் இன்று

image

1099 – முதலாம் சிலுவைப் போர். 15,000 கிறித்தவப் போர் வீரர்கள் பட்டினியுடன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்து, நகரினூடாக சமய ஊர்வலம் சென்றனர். 1497 – வாஸ்கோ டோ காமாவின் இந்தியாவுக்கான முதல் ஐரோப்பிய நேரடிப் பயணம் ஆரம்பித்தது. 1879 – அமெரிக்காவின் ஜென்னெட் என்ற கப்பல் தனது கடைசி ஆய்வுப் பயணத்தை வட துருவம் நோக்கி ஆரம்பித்தது. 2003 – சூடான் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 117 பேர் உயிரிழந்தனர்.

News July 8, 2025

கழிவுகளை நீக்கும் லெமன் டீ

image

*எலுமிச்சையில் உள்ள நுண்சத்துகள் அழற்சியை தடுத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் * இதிலுள்ள பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், தாமிரம் உள்ளிட்ட நுண்சத்துகள் மூளையை சுறுசுறுப்பாக்கி மனம் புத்துணர்வு பெறவும் மனஅழுத்தம் நீங்கவும் உதவுகிறது *வளர்சிதை மாற்ற செயல்பாட்டை ஊக்குவிக்கிறது, கொழுப்பு சேர்வதை தடுக்கிறது, இதனால் எடை குறையும் *உடலின் நச்சுகள், கழிவுகளை நீக்குவதால் நோய்கள் தடுக்கப்படும்.

News July 8, 2025

கில்லிடமிருந்து இங்கி., வீரர் கற்க வேண்டும்: வாகன்

image

தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி, இங்கி., அணிக்காக விளையாடுவதே ’அதிர்ஷ்டம்’ என விமர்சித்துள்ளார் மைக்கல் வாகன். 56 போட்டிகளில் 31 தான் கிராவ்லியின் சராசரி, சுப்மன் கில் இத்தொடருக்கு வரும்போது 35 என்ற சராசரியில் இருந்தார், தற்போது 42-ஆக உயர்ந்துள்ளது. முதலில் தற்காப்பில் கவனம் செலுத்தி, பின்னர் மோசமான பந்துகளை தாக்கினார். இதனை கிராவ்லி கில்லிடமிருந்து கற்க வேண்டுமென்றார்.

error: Content is protected !!