News March 24, 2024
செங்கல்பட்டு: முன்னாள் அமைச்சர் காலமானார்

மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இராமகிருஷ்ணன். அச்சரப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று (1989) ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன் பிறகு கட்சி மாறி அதிமுகவில் இணைந்து கட்சியில் அச்சரப்பாக்கம் சட்டமன்ற தனி தொகுதியில் (1991 To 95) சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ராமகிருஷ்ணன் இன்று (மார்ச்-24) காலமானார்.
Similar News
News April 30, 2025
அட்சய திருதியை: தங்கம் வாங்க போறீங்களா?

அட்சய திருதியையான இன்று (ஏப்.30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் செழிப்பை தரும். அதுவும் மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். அதனால், செங்கல்பட்டில் உங்கள் வீட்டருகே உள்ள லட்சுமி அல்லது பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு தங்கம் வாங்குங்கள். காலை 9:30 – 10:30, மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். செல்வம் செழிக்கும். எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க
News April 29, 2025
செங்கல்பட்டு மகாபலிபுரம் இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

இன்று ஏப்ரல் 29 செங்கல்பட்டு மற்றும் மகாபலிபுரத்தில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவசர தேவை என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். வேலைக்குப் போகும் பெண்கள் இந்த தொலைபேசி எண்களை வைத்திருப்பது நல்லது மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள்.
News April 29, 2025
தாயை கொன்ற வழக்கில் இருந்து மகன் விடுதலை

குன்றத்தூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற தஸ்வந்த் ஜாமினில் வெளி வந்து தாயை கொன்ற சம்பவம் 2017ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமி தொடர்பான வழக்கில் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் விதித்த மரண தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், இன்று தாயை கொன்ற வழக்கிலும் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி செங்கல்பட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.