News December 24, 2024
X ப்ரீமியம் பிளஸ் கட்டணம் உயர்வு: அதிர்ச்சியளித்த மஸ்க்

X சமூகவலைதளம், இலவசம், ப்ரீமியம், ப்ரீமியம் பிளஸ் என்று தனித்தனி சேவைகளை அளித்து வருகிறது. இதில் ப்ரீமியம், ப்ரீமியம் பிளஸ் என்பது கட்டண சேவையாகும். இந்நிலையில், ப்ரீமியம் பிளஸ் சேவைக்கான மாத கட்டணத்தை ரூ.1,300இல் இருந்து ரூ.1,750ஆகவும், ஆண்டு கட்டணத்தை ரூ.13,600இல் இருந்து ரூ.18,300ஆகவும் உரிமையாளர் எலான் மஸ்க் அதிகரித்துள்ளார். இதனால் அதை பயன்படுத்தும் கோடிக்கணக்கானோர் அதிர்ச்சியில் உள்ளனர்.
Similar News
News July 8, 2025
கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் அதிகமா?

இதே வேகத்தில் போனால், 2050-க்குள் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் அதிகமாக இருக்கும் நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஆம், நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் 85 சதவீதம், நிலம் (அ) கடலில் எறியப்படுகிறது. இவை கடலையும், காற்றையும் மாசுப்படுத்துகின்றன. மேலும், மீன்களின் உடலிலும் சேர்வதால், அவற்றை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்களை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக்கை தவிர்க்கலாமே!
News July 7, 2025
மாமியாரை கர்ப்பமாக்கிய மருமகன்… விநோதம்!

இந்தோனேசியாவில் இந்த விநோத சம்பவம் நடந்துள்ளது. 21 வயது மனைவியுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திவந்த நபர், திடீரென விவாகரத்து செய்துள்ளார். மாமியாரின் வயிற்றில் இவரின் குழந்தை வளர்வது தெரிய வந்ததால் ஏற்பட்ட குடும்ப சிக்கலே இதற்கு காரணம். மனைவிக்கு இப்போது இவர் வளர்ப்பு தந்தை. இதனால் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, மாமியாரை திருமணம் செய்துகொண்டார். இப்போது குழந்தையும் பிறந்துவிட்டதாம்.
News July 7, 2025
பதவி நீக்கம்.. சில மணி நேரத்தில் அமைச்சர் தற்கொலை

ரஷ்யாவில் அதிபர் புதினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் சில மணிநேரங்களிலேயே தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உக்ரைனின் தாக்குதல் காரணமாக ரஷ்யாவில் விமான சேவை பாதிக்கப்பட்டதால் அந்த துறையின் அமைச்சர் ரோமன் ஸ்டாரோவாய்ட்டை புதின் பதவி நீக்கம் செய்தார். இதனையடுத்து, காருக்குள் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தன்னைத்தானே சுட்டு ரோமன் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.