News March 24, 2024

தி.மலை அருகே தீ விபத்து

image

ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் அசோக்குமார், சந்திரகலா என்பவருடைய கோழிப் பண்ணை கொட்டகையின் மேலே சென்ற மின் கம்பிகள் உரசியதில் கோழி பண்ணை மீது தீப்பொறிகள் பட்டு கடும் தீ விபத்து ஏற்பட்டது. பண்ணையில் இருந்த 100 க்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் எரிந்து நாசமாகியது.

ஆரணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் கடும் சேதாரம் தவிர்க்கப்பட்டது.

Similar News

News April 13, 2025

காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி

image

திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்குளம் பகுதி அருகே புதுச்சேரியில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த கார், திருவண்ணாமலையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தியிலே உயிரிழந்தனர். மேலும், கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

News April 13, 2025

திருவண்ணாமலை அருகே பயங்கர விபத்து 4 பேர் பலி

image

திருவண்ணாமலை அருகே சோமாசிபாடி அடுத்த காட்டுக்குளம் பகுதியில் இன்று அதிகாலை 03:30 மணியளவில் காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துககுள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே  பலியாகினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்பெண்ணாத்தூர் காவல்துறையினர்,உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 13, 2025

பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி

image

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!