News December 24, 2024

ஷியாம் பெனகல் உடல் தகனம்

image

மூத்த இயக்குனர் ஷியாம் பெனகல் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. மும்பை சிவாஜி பூங்காவில் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இதில் அவரது உறவினர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள ஷியாம் பெனகலுக்கு, பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை அரசு அளித்துள்ளது. சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலமானார்.

Similar News

News September 11, 2025

இதை மட்டும் Avoid பண்ணாதீங்க

image

பிசியாக இருந்தால் அல்லது அடிக்கடி டாய்லெட் செல்ல வேண்டுமே என்ற அலுப்பு காரணமாக, நம்மில் பலரும் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டாலும், அதை புறக்கணித்து இருந்து விடுகிறோம். அடிக்கடி இப்படி செய்வதால், சிறுநீர் அழுத்தம் அதிகரிக்கும். இது சிறுநீரக பாதிப்பு, ஸ்டோன், கட்டுப்பாட்டை மீறி சிறுநீர் கழித்தல் போன்றவற்றுக்கு காரணமாகலாம். ஆகவே, இயற்கை உபாதைக்கு உடல் அழைக்கும் போது, உடனடியாக செவி கொடுங்கள்.

News September 11, 2025

அணி மாறி வாக்களித்த திமுக MP யார்?

image

நேற்று நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியை சேர்ந்த 15 MP-கள், எதிரணி வேட்பாளருக்கு வாக்களித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், எந்தெந்த கட்சி MP-கள் அப்படி வாக்களித்தனர் என்று ஒரு பட்டியல் சோஷியல் மீடியாவில் உலா வருகிறது. அதன்படி ஆம் ஆத்மி-5, சிவசேனா(UBT)-4, காங்.,-2, திமுக, JMM, RJD, NCP-SP கட்சிகளின் தலா 1 MP-கள் எதிரணிக்கு வாக்களித்துள்ளனராம். அந்த திமுக MP யாராக இருக்கும்?

News September 11, 2025

ராசி பலன்கள் (11.09.2025)

image

➤ மேஷம் – பொறுமை ➤ ரிஷபம் – மேன்மை ➤ மிதுனம் – ஆதரவு ➤ கடகம் – போட்டி ➤ சிம்மம் – மகிழ்ச்சி ➤ கன்னி – ஆதாயம் ➤ துலாம் – அன்பு ➤ விருச்சிகம் – இன்பம் ➤ தனுசு – நன்மை ➤ மகரம் – சோர்வு ➤ கும்பம் – விவேகம் ➤ மீனம் – பகை.

error: Content is protected !!