News December 24, 2024
டிரம்ப் ஆசைக்கு அணை போட்ட கிரீன்லாந்து

கிரீன்லாந்தின் உரிமையும் கட்டுப்பாடும், அமெரிக்காவுக்கு அவசியம் என டிரம்ப் கூறியிருந்த நிலையில், ‘கிரீன்லாந்து எங்களுடையது; விற்பனைக்கு இல்லை’ என அந்நாட்டுப் பிரதமர் மூட் எகெடே தடாலடியாகக் கூறியுள்ளார். வெறும் 56,000 பேர் மட்டுமே மக்கள் தொகையாகக் கொண்ட கிரீன்லாந்து தீவு ஐரோப்பிய நாடான டென்மார்க் ஆளுகைக்கு உட்பட்ட தன்னாட்சி உரிமை கொண்ட நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 8, 2025
ஆதாரை 12வது ஆவணமாக ஏற்க வேண்டும்: SC

வாக்காளர் பட்டியலில் ரேஷன் கார்டு உள்ளிட்ட 11 ஆவணங்கள் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 12-வது ஆவணமாக ஆதாரை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என SC உத்தரவிட்டுள்ளது. ஆதாரை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆதாரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான வழிமுறை வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.
News September 8, 2025
காசு கொடுத்தாலும் EPS வெற்றி பெற முடியாது: கருணாஸ்

தன்னுடைய சுயநலத்திற்காக அதிமுகவை படுகுழியில் தள்ளும் வேலையில் EPS ஈடுபட்டுள்ளதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ் விமர்சித்துள்ளார். 2026-ல் ஓட்டுக்கு ₹2000 கொடுத்தாலும் EPS வெற்றி பெறுவது கடினம் என்றும் ஜெயலலிதாவின் கனவை அவர்(EPS) அழித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். செங்கோட்டையனை பொறுப்புகளில் இருந்து நீக்கியதால், கொங்கு மண்டல மக்கள் கோபத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
News September 8, 2025
சற்றுமுன்: இந்தியா அபார வெற்றி

ஆசியக் கோப்பை பெண்கள் ஹாக்கி தொடரில், சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி கோல் மழை பொழிந்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா, முடிவில் 12-0 என வென்றது. நவ்னீத், மும்தாஸ் கான் ஹாட்ரிக் கோல் அடித்தனர். முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை 11-0 என வீழ்த்திய இந்தியா, நடப்பு சாம்பியன் ஜப்பானை 2-2 என டிரா செய்தது. இந்த தொடரில் கோப்பையை வென்றால் இந்தியா நேரடியாக WC-க்கு தகுதிபெறும்.