News December 24, 2024
மேல்மருவத்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும், பெங்களூருவில் இருந்து குழுவாகச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
சேலம்: உள்ளூரில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்!

சேலம்: அயோத்திபட்டினத்தில் செயல்பட்டு வரும் Sri Krishnav electronic and mobile நிறுவனத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் தலா ஒரு Front sales officer பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு பேச்சுத்திறன், வாடிக்கையாளர் சேவை மற்றும் ஏதேனும் விற்பனை அனுபவம் ஆகியவை இருப்பது அவசியம். சம்பளம் ரூ.10,000 வரை வழங்கப்படுகிறது. +2 முதல் டிகிரி படித்த 25 வயது நிரம்பியவர்கள்<
News November 14, 2025
இளைஞர் விபரீத முடிவு சேலம் அருகே சோகம்!

சேலம்; உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த 25 வயதான கூரியர் ஊழியர் பிரபாகரன், முதுகு தண்டுவட பாதிப்பால் ஏற்பட்ட தொடர் வலியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்தும் வலி குறையாததால், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை!
News November 14, 2025
சேலத்தில் நாளை ஆசிரியர் தகுதி தேர்வு!

தமிழ்நாடு முழுவதும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு ஒன்று மற்றும் இரண்டு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் 4,646 பேர் தேர்வு எழுதுகின்றனர். நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை 48 மையங்களில் 18,847 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 9:30 மணிக்குள் தேர்வுக்கு வரவேண்டும் இல்லை என்றால் அனுமதி வழங்கப்பாடது!


